தீய மனதை மாற்ற வாரும், தூய ஆவியே – கன

தீய மனதை மாற்ற வாரும், தூய ஆவியே – கன
நேய மேவியே

1. மாய பாசத் தழுந்தி வாடி மாளுஞ் சாவிதால் – மிக மாயும்
பாவி நான். – தீய

2. தீமை செய்ய நாடுதென்றன் திருக்கு நெஞ்சமே, – மருள்
தீர்க்கும் தஞ்சமே – தீய

3. பரத்தை நோக்க மனம் அற்றேனே, பதடிதான் ஐயா – ஒரு
பாவி நான், ஐயா – தீய

4. புதிய சிந்தை, புதிய ஆசை புதுப்பித்தாக்கவே, – அதை
புகழ்ந்து காக்கவே – தீய

5. ஏக்கத்தோடென் மீட்பைத்தேடி, இரந்து கெஞ்சவே, – தினம்
இதயம் அஞ்சவே – தீய

6. கிறிஸ்து மீது நாட்டங் கொண்டு கீதம் பாடவே, அவர்
கிருபை தேடவே – தீய

7. தேவ வசனப் பாலின் மது தோட்டம் தோன்றவே, – மிகு
தெளிவு வேண்டவே – தீய

8. ஜெபத்தின் தாகம் அகத்தில் ஊறி ஜெபித்துப் போற்றவே
மிகச் சிறப்பாய் ஏற்றவே. – தீய



dheeya manathai matrra varum, thuya aaviye

dheeya manathai matrra varum, thuya aaviye – kana
neya meviye

1. maya bachath dhazhunththi vadi malunj savithal – mika mayum
pavi nan. – dheeya

2. dheemai seyya naduthenran thirukku nenjchame, – marul
dheerkkum dhanjchame – dheeya

3. paraththai nokka manam atrrene, padhadithan aiyo – oru
pavi nan, aiya – dheeya

4. puthiya sinththai, puthiya aasai puthupiththakkave, – athai
pukazhnththu kakkave – dheeya

5. eekkaththoden madbaiththedi, iranththu kenjchave, – thinam
idhayam anjchave – dheeya

6. kiristhu mathu nadtang kondu kadham patave, avar
kirubai thetave – dheeya

7. theva vachanab palin mathu thedtam thondrave, – miku
thelivu ventave – dheeya

8. japaththin thakam akaththil uutri jabiththub potrrave
mikas sirappay eetrrave. – dheeya